விருதுநகர், தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித், மே 10 இரவில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து காரில் வரும் அவர், விருதுநகர் பொதுப்பணித்துறை மாளிகையில் தங்குகிறார். மே 11 காலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்கிறார். விருதுநகருக்கு 9:00 மணிக்கு வருகிறார். காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 வரை பொதுப்பணித்துறை மாளிகையில், மக்கள், தொண்டு நிறுவனத்தினரிடம் மனுக்கள் பெற உள்ளார். மதிய உணவிற்கு பின், மாலை 4:00 மணி முதல் 5:00 வரை கிராம சுயராஜ் அபியான் திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். இதன் பின் மதுரை கல்லுப்பட்டி அருகே தனியார் பாராமெடிக்கல் கல்லுாரி விழாவில் பங்கேற்கிறார். இரவு 7:00 மணிக்கு மதுரை செல்லும் அவர், விமானத்தில் சென்னை செல்கிறார்.