உடுமலை;உடுமலை அருகே
அமராவதி அம்மன் மற்றும் மலைப்பிடாரி அம்மன்களுக்கு, திருக்கல்யாணம்
நடைபெற்றது.
உடுமலை அருகே அமராவதி அணையில், அமராவதி அம்மன் மற்றும்
மலைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழை வளம் வேண்டி,
அருகிலுள்ள கிராம மக்கள், அம்மன்களுக்கு, திருக்கல்யாண திருவிழா நடத்துவது
வழக்கம். இந்தாண்டுக்கான, நோன்பு கடந்த, ஏப்., 24ம் தேதி சாட்டப்பட்டது.
திருவிழாவில், நேற்று இரவு 7:00 மணிக்கு, சக்தி கும்பம் எடுத்தல் மற்றும்
அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு,
அம்மனுக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, அபிேஷக மற்றும்
விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை(10ம்
தேதி) மஞ்சள் நீராடுதலும், 11ம் தேதி மறு பூஜையும் நடக்கிறது.