பதிவு செய்த நாள்
10
மே
2018
01:05
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில், கரகம் அழைத்தல் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் உள்ள, செல்வ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா, கடந்த வாரம் துவங்கியது. விழாவையொட்டி, ஸ்ரீ பாலவிநாயகருக்கு கணபதி ேஹாமம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து, கம்பம் நட்டு பூவோடு வைத்தல், சக்தி கரகம் அளித்தல் நிகழ்ச்சியும், சிறுவர், சிறுமியர் கலை நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, அம்மன் அழைத்தல், செல்வ மாரியம் மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கரகம் அழைத்தல், பால்குடம் எடுத்தல், காலை, 10:30 மணிக்கு பொங்கல் வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்தல், அபிேஷக பூஜையும், மதியம் அன்னதானம், முளைப்பாரி, மாவிளக்கு பூஜை, மாலை, 3:00 மணிக்கு அக்னி கரகம் விழாவும் நடந்தது. இன்று காலை, 10:30 மணிக்கு மஞ்சள் நன்னீராட்டு விழா நடக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை அம்மனுக்கு மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திரு விழாக்குழுவினர் செய்துள்ளனர்.