பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜோதி நகர் அமைதி நகர் மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி ஜோதிநகர் அடுத்துள்ள, அமைதிநகரில் மதுரைவீரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டது. கடந்த, 6ம் தேதி ஊர் சாந்து, 7ம் தேதி தீர்த்தக் கும்பம் வழிபாடு, 8ம் தேதி உருவாரம் கொண்டு வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. நேற்று, காலை, 6:00 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அமுது பொங்கல், தீபாராதனையும், நாளை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் அபிேஷக பூஜையும் நடக்கிறது.