திருப்புத்துார், திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழாவை முன்னிட்டு மே 13 அம்மன் ரத ஊர்வலம் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் வசந்தப்பெருவிழா மே 5ல் அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டி துவங்கியது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளத்தை பவனி வருகிறார். நாளை மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்ஸவமும், மே13 மாலை 6:00 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 6:30 மணிக்கு அம்மன் ரத ஊர்வலமும், மே14 மாலை 3:30 மணிக்கு பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது. ஏற்பாட்டினை வசந்தப்பெருவிழாக்குழுவினர் செய்கின்றனர்.