திண்டிவனம்:ஓங்கூர் சீராத்தம்மன் கோவில் தேரோட்ட விழா, வரும் 23ம் தேதி நடக்கிறது. திண்டிவனம் வட்டம், ஓங்கூர் கிராமத்தில் உள்ள சீராத்தம்மன் கோவில் தேர்த் திருவிழா, வரும் 21ம் தேதி அபிஷேக ஆராதனைகளுடன் துவங்குகிறது. இதையொட்டி, 22ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், கரக வீதியுலாவும் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக 23ம் தேதி காலை 6:00 மணிக்கு சீராத்தம்மனுக்கும், பரமேஸ்வரன் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் மணக்கோலத்துடன் வீதியுலா நடக்கிறது. மறுநாள் காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், கும்பம் கொட்டுதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.