பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
ஆர்.கே.பேட்டை: கோடையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல், மக்களை காத்தருள வேண்டி, நேற்று, கங்கையம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாறுவேடம் தரித்தும், மடி பிச்சை கேட்டும், பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். கோடையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் மக்களை காத்தருள வேண்டும் என வேண்டி, கங்கையம்மனுக்கு சித்திரையில், ஜாத்திரை விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி நேற்று, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், கங்கையம்மன் ஜாத்திரை கொண்டாடப்பட்டது. காலையில், அம்மனுக்கு வீடுகளில் அசைவ படையலுடன் கூழ் வார்த்து, பக்தர்கள் வழிபட்டனர். அதை தொடர்ந்து, அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து படையல் இட்டனர். மேலும், பக்தர்கள் மாறுவேடம் தரித்தும், மடி பிச்சை கேட்டும், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.