கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் கண்கொடுத்த வினாயகர் கோவிலில் திருநாவுக்கரசர் குரு பூஜை நடந்தது.கண்டாச்சிபுரம் கண்கொடுத்த வினாயகர் கோவிலில், சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூஜை நடந்தது. இதனையொட்டி மூலவர் வினாயகர் மற்றும் அப்பர் என்கிற திருநாவுக்கரசருக்கும் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அப்பர் சுவாமிகளை வழிபட்டனர். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா நாராயணசாமி, அர்ச்சகர் சிவநேசன் மற்றும் தண்டபாணி ஆகியோர்செய்திருந்தனர்.