சேவுகப்பெருமாள் கோயிலில் விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கிய வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2018 11:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மே 10 ம்தேதி கோவிலில் உள்ள விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணியளவில் வெள்ளி கேடயத்தில் வைத்து புதிய மாடுகள் பூட்டிய ரதத்தில் விநாயகர் கிராமத்திற்கு புறப்பட்டார். கீழக்காடு ரோடு வழியாக வந்து சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளிய விநாயகருக்கு மக்கள் வழி நெடுக அர்ச்சனை செய்து வழிபட்டனர். மே 20 ல் காலை 10:00 மணியளவில் விநாயகர் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளுவார். அன்று மதியம் 1:00 மணியளவில் சேவுகப்பெருமாள் கோவிலில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழா 10 நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடைபெறும்.