பதிவு செய்த நாள்
16
ஜன
2012
10:01
மதுரை:மதுரை மீனாட்சி அம்மனின் மூலவர் சிலைக்கு, ரூ.1.50 கோடி மதிப்புள்ள புதிய வைர கிரீடம் ஜன.,19ல் அணிவிக்கப்படுகிறது. அம்மனுக்கு ஏற்கனவே பழமையான வைரகிரீடம் உள்ளது. தீபாவளி, தை அமாவாசை உட்பட முக்கிய நாட்களுக்கு மட்டும் அணிவிக்கப்படும். தற்போது மதுரை உபயதாரர் ஒருவர், ரூ.1.50 கோடி மதிப்புள்ள வைரகிரீடத்தை, ஜன.,19ல், கோயிலுக்கு வழங்குகிறார். அன்று அம்மனுக்கு அணிவிக்கப்படும். கடந்த நவ.,20ல், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை உற்சவர்களுக்கு தங்கம், நவரத்ன கற்கள் பதித்த, ரூ.55 லட்சம் மதிப்புள்ள, 1.75 கிலோ எடையுள்ள, கீரிடங்களை உபயதாரர்கள் வழங்கினார். இவை திருக்கல்யாணத்தன்று உற்சவங்களுக்கு சாத்தப்படும்.