திருச்சிற்றம்பலம்கூட்ரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆரோவில் அடுத்த இரும்பை கிராமத்தில் மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கோவில் நிர்வாகிகள் பழனி, ராஜகோபால், ஏழுமலை, செயல் அலுவலர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.