சோழவந்தான்; சோழவந்தான் அங்காள ஈஸ்வரி குருநாதன், கருப்புசாமி கோயிலில் வைகாசி உற்ஸவத் திருவிழா நடந்தது. இதையொட்டி மே 8 வைகையாற்றிலிருந்து சுவாமி பெட்டி புறப்பாடாகி கீழ்ப்பட்டி சென்றது. மே 19 மயான காவல் பூஜை முடிந்து, நேற்று மாலை பெட்டி கோயில் திரும்பியது. இன்று( மே 21) அம்மனுக்கு விஷேச பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.