பதிவு செய்த நாள்
23
மே
2018
01:05
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கொள்ளாபுரியம்மன் கோவில், ஜாத்திரை திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. காலை, 10;00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பெண்கள் கூழ் வார்த்தனர். பிற்பகல், 3:00 மணியளவில், பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 10:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளினார். அதிகாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தை வந்தடைந்தது. இன்று, கங்கையம்மன் ஜாத்திரை நடக்கிறது. காந்தி சிலை அருகே, நான்கு முனை சந்திப்பில், வேப்பிலை குடிலில் அம்மன் எழுந்தருளுகிறார். நாளை காலை, ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் அம்மன், நீர்நிலையில் கரைக்கப்படுகிறார்.