பதிவு செய்த நாள்
23
மே
2018
01:05
புதுச்சேரி:மார்கண்டேயர் மடம் சார்பில், புதுச்சேரியில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த 19 சித்தர்களைதரிசனம் செய்யும் நிகழ்ச்சிக்கு, வரும் ௨௫ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மார்கண்டேயர் மட நிர்வாகி சந்திரசேகர் அளித்த பேட்டி: புதுச்சேரியில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் மகாருத்ராட்சத்தில் சிவலிங்கம் அமைத்து ஆரம்பிக்கப்பட்ட மார்கண்டேயர் திருமடம் சார்பில், புதுச்சேரியில் வாழ்ந்து ஜீவசமாதிஅடைந்த சித்தர்களின் ஆலயத்தை தரிசிக்க, ஒரு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 25ந் தேதி, 54 இருசக்கர வாகனத்தில் இருவர் அமர்ந்து கொண்டு, 19 சித்தர்களின் படத்தை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சித்தர் ஆலயத்திற்கும் சென்று, அகண்ட தீபம் ஏற்றி சங்கு ஒலி, எக்காள ஒலி எழுப்பி, சித்தர்கள் பெயர்களை ஒன்று சேர 108 முறை ஓதி வழிபடவுள்ளோம்.
வரும் 25ம் தேதி காலை 5:30 மணிக்கு, மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள தொள்ளைக்காது சுவாமிகளை வணங்கி விட்டு, 6:45 மணிக்கு, அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள நாகலிங்க சுவாமிகள் கோவில், வைத்திக்குப்பம் அக்கா சுவாமி, முத்தியால்பேட்டை வேதானந்த சுவாமி, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி, லாஸ்பேட்டை பொன்னியம்மன் கோவிலில் உள்ள பெரியவர் சுவாமி என வரிசையாக சென்று, நிறைவாக, சின்னபாபுசமுத்திரத்தில் உள்ள மகான் படேசாகிப் சுவாமிகளை தரிசித்து நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. கட்டணம் ஏதும் கிடையாது. தேனீர், உணவு இலவசமாக வழங்கப்படும்.இவ்வாறு, சந்திரசேகர் கூறினார்.