பதிவு செய்த நாள்
16
ஜன
2012
11:01
ஈரோடு: தமிழர்களின் திருநாளை முன்னிட்டு, ஈரோட்டில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழர்களின் திருநாளான நேற்று ஈரோட்டில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லை நகர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பெரியமாரியம்மன் கோவில், கமலவல்லி தாயார் சமேத ரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், திண்டல், ஸ்ரீ வேலாயுத ஸ்வாமி கோவில், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ கொங்காலம்மன் கோவில் போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தை பூசத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். நேற்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெப்படை, ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி, பவானி, சித்தோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பழனி கோவிலுக்கு நடப்பணயம் மேற்கொண்டனர். சமூக அமைப்புகள் சார்பில் சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.