நீரில் தோன்றிடும் சங்கின் ஒலி பாவத்தைப் போக்கி இஷ்டசித்தியைத் தருவதாகும். இவ்வாத்தியத்தை பூஜையில் நீராட்டலின் துவக்கத்திலும் முடிவிலும், பூஜையின் முடிவிலும் நைவேத்தியத்தை மடப்பள்ளியிலிருந்து வெளியில் எடுத்துவர தோள்மீது ஏற்றும் காலத்திலும், மந்திர புஷ்பார்ண காலத்திலும் என ஐந்து காலங்களில் சங்கொலி எழுப்புவது அவசியம் என்கின்றன ஆகமங்கள்.