விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி காகுப்பம் அய்யனார் கோவிலில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம், காகுப்பம் அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. அய்யனார் மலர்களால் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பொங்கலிட்டு வழிபட்டனர்.