சேலம்: சேலம், கருங்கல்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா, நேற்று மகாசக்தி அழைப்புடன் துவங்கியது. நேற்று சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் 6 மணி வரை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. இரவு 7 முதல் 8 மணி வரை தளிகை பூஜை, அலங்கார ஆர்த்தி செய்தல், தீபாராதனை நடந்தது. இன்று சாமுண்டி அழைப்பு நடக்கிறது. நாளை (17ம் தேதி) காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோமாதா பூஜை நடக்கிறது. 8.45 மணிக்கு சவுடேஸ்வரி சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 18ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம், பானக மெரவணை நடக்கிறது. தொடர்ந்து திருவிழா பந்தலில் புறப்பட்டு, கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் மலைக்கோவில் தேவஸ்தானத்தை அடைந்து, அங்கிருந்து திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு விழா கமிட்டியார், ஊர் பொதுமக்களுடன் வாத்தியங்கள் முழங்க, கருங்கல்பட்டியில் நகர்வலம் வந்து கொலு மண்டபத்தை வந்தடையும். 19ம் தேதி காலை 7.45 மணிக்கு மகாகணபதி பூஜை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் இரவு கலைநிகழ்ச்சி நடக்கிறது.