தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள எழுவன்கோட்டை விஸ்வநாதர் சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயில்வைகாசி திருவிழாதேரோட்டம் நடந்தது. மே19ந் தேதிகொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. எழுவன்கோட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.