பதிவு செய்த நாள்
29
மே
2018
01:05
திருப்பூர்;ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம், பக்தர்களின் ஓம் நமசிவாய கோஷம் முழங்க, நடந்தது. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி தேர் மாலை, 4:00 மணிக்கு, வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சிவகண பூத வாத்தியங்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், பஞ்ச வாத்தியம், சங்கு நாதம் முழங்க, பக்தர்களின் ஓம் நமசிவாய கோஷம் முழங்க, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சிவனடியார்கள் நந்தி கொடி ஏந்தியும், நால்வர் வேடம் அணிந்த சிறுவர்களும், தேருக்கு முன் சென்றனர். மரகதம், பவளக்கல் பதித்த ரத்தின பதக்கம், பொற்கிரீடம் தரித்து, தேர் வீதிகளில், ஸ்ரீ விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலா வந்தனர். புதுச்சேரி, திருக்குடந்தை, வெண்ணத்துார், இளம்பிள்ளை, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து, சிவனடியார்கள் பங்கேற்றனர். இன்று ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.