பதிவு செய்த நாள்
30
மே
2018
01:05
நகரி: கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், ஆண்டு கருட சேவை உற்சவ விழாவையொட்டி, உற்சவர் கருட வாகனத்தில், எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ள கரிய மாணிக்க பெருமாள் கோவில், திருப்பதி தேவஸ்தான இணை கோவிலாக செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில், ஆண்டு கருட சேவை உற்வச விழாவையொட்டி, மூன்று நாட்களாக வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. நேற்று, மூலவர் கரிய மாணிக்க சுவாமி, பூநீலாதேவி, ஆண்டாள் தயார் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. பின், திருமலையில் இருந்து, கொண்டு வரப்பட்ட தங்க கருட வாகனத்தின் மீது, உற்சவர் கரிய மாணிக்க பெருமாள் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.