பதிவு செய்த நாள்
30
மே
2018
01:05
நகரி: நகரி அடுத்த நாராயண வனத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான, நேற்று முன்தினம், சுவாமி அம்ச வாகனத்தில் எழுந்தருளினார். நாளை இரவு, கருட சேவையும், வரும் ஞாயிற்றுக் கிழமை, தேர் திருவிழா மற்றும் கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.இந்த கோவிலில், சுவாமியின் திருக்கல்யாணத்திற்காக, மஞ்சள் அரைக்க பயன்படுத்திய மிகப்பெரிய இயந்திர கல், இன்றும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு, பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார்.மறுநாள் காலை, சிறிய சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலம் உலா வந்த பெருமாள், நேற்று காலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு மிக்க கருட சேவை, நாளை இரவு நடக்கிறது.ஞாயிற்றுக்கிழமை காலை, தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.