தேவிபட்டினம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2018 11:06
ராமநாதபுரம்:தேவிபட்டினம் தர்மமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஜூன் 1 ல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு விக்னஷே்வர பூஜை, மகா கணபதி ேஹாமம் மதியம் 2:00 மணிக்கு தர்மமுனீஸ்வரர் நுாதன விக்ரஹ கிராம பிரவேசம். இரவு 9:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஜூன் 2ல் காலை 8:30 மணிக்கு மழை வேண்டி வருண ெஜபம், கோமாதா பூஜை,கோபுர கலச ஸ்தாபனம் இரவு 10:00 மணிக்கு பிம்பஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு 4 ம் கால யாகவேள்வி, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு,10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ராஜலிங்க குருக்கள் தலைமையில் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.