பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
11:06
குளித்தலை: காளிம்மன்கோவில் திருவிழாவில், பால் குடம் எடுத்தும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தூக்கிச் சென்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர் காளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று காலை காவிரி ஆற்றிலிருந்து, பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, மேட்டு மருதூர் செல்லாண்டியம்மன் கோவில், முருகன், விநாயகர், மாரியம்மன், மள்ளர் ஆண்ட கோவில்களில் சிறப்பு பூஜை செய்து. முக்கிய வீதி வழியாக, பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். சிலர் குழந்தையை கரும்புத் தொட்டிலில் இட்டு தூக்கிச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு கரகம் பாலித்தல், சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை காவு கொடுத்தல், மதியம் பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நாளை காலை கிடா வெட்டுதல், இரவு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. மறுநாள் அதிகாலையில் சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.