திண்டுக்கல்: திண்டுக்கல் பொன்னகரம் இ.பி., அலுவலகம் பின்புறம் உள்ள பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் நாமாலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குருவந்தனம், கணபதி, கோ பூஜை, மகாசங்கல்பம், கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் நான்கு கால வேள்விகள் நடந்தது. நேற்று தேவதா பூஜை, ஜப ேஹாமம், மூர்த்தி கலா தத்வ ேஹாமங்கள், நாடி சந்தானம், சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. யோகி ராம்சுரத்குமாருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அனுபவ அரங்கம் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.