நவபாஷாண நடைபாதையில் வெப்பம் தணிப்பு: தண்ணீர் ஊற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2018 12:06
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண நடைமேடை வழியாக நவகிரகங்களை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் பாதங்கள் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஊழியர்கள் நடைபாதையில் தண்ணீர் ஊற்றினர். தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இங்கு திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷாண நடை மேடையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் டைல்ஸ் கற்கள் சூடேறி பக்தர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் நடை பாதையில் செல்லும் பக்தர்கள் பாதிக்காத வகையில் நவபாஷாண ஊழியர்கள் வெயில் நேரங்களில் கடல் நீரை குடங்களில் எடுத்து நடை பாதையில் ஊற்றி சூட்டை தணித்தனர். ஊழியர்களின் இச்செயலை பக்தர்கள் பாராட்டினர்.