ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள, ராகவேந்திரர் கோவிலில், உலக நன்மைக்காக சிறப்பு லட்சார்ச்சனை விழா, நேற்று நடந்தது. பவானி குருபிரசாத் ஆச்சார் தலைமையில், 100 பேர் வேத மந்திரங்கள் முழங்கி, ராகவேந்திரருக்கு மலர்களால் அர்ச்சனை செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.