பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
12:06
தர்மபுரி: தர்மபுரி அருகே, 17 ஆண்டுகளுக்கு பின் நடந்த கோவில் திருவிழாவில், 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து, சுவாமியை வழிபட்டனர். பாப்பாரப்பட்டி அடுத்த பனைக்குளத்தில், 18 கிராம கரக செல்லியம்மன், பட்டாளம்மன், திம்மராயசுவாமி, சாக்கப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் விழா, 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த, 11ல் மண்டு சாட்டுதல் உடன் துவங்கியது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய நோன்பு, வீரபத்திர சுவாமி, மாவிளக்கு, பலகை திருவிழா நடந்தது. இதில், 18 கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்து, சுவாமியை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று, கங்கையில் சேர்த்தல் மற்றும் எருது விடும் விழா நடக்கிறது.