பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
12:06
குளித்தலை: காளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர். குளித்தலை அடுத்த, மேட்டு மருதுார் காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 3ல், மருதுார் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். மறுநாள் மாலை, பக்தர்களின், அலகு குத்துதல், அக்னிச் சட்டி ஏந்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. சிலர் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, ஒல்லி விட்டானுக்கு எருமைக் கிடா பலியிடப்பட்டது. தொடர்ந்து, காளியம்மன், மாரியம்மன், ஒல்லிவிட்டான் சுவாமிகள் வீடு வீடாகச் சென்று, பூஜை வாங்கும் சுவாமி திருவீதி உலா நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.