Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) மழலைக்குரல் கேட்கும் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆடம்பர வசதி பெருகும்
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆடம்பர வசதி பெருகும்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

பொன்னான மனதிற்கு சொந்தக்காரரான மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம்  சூரியன் சாதகமாக இருந்து சிறப்பான பலன் தருவார். புதன் ஜூன் 24 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 5க்கு பிறகு நற்பலன் தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மாதத்தின் பிற்பகுதியில் எந்தச் செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காமல் போகாது. 6ம் இடத்தில் இருக்கும் சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்.  பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் புதனால் நன்மை பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வீடு, மனை, வாகனம் வாங் கலாம். ஜூன் 24 க்கு பிறகு மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகவும். ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் பெண்களால் கூடுதல் நன்மை கிடைக்கும்.  ஜூன் 25,26ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும்.  ஜூலை 7,8ல் அவர்கள் வகையில்  பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 5 க்கு பிறகு சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூன் 24 க்கு பிறகு புதன் 7-ம் இடத்தில் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். குருபகவானால் அவ்வப்போது வீண் அலைச்சலைச் சந்திக்கலாம்.  ஜூன் 23,24 ஆகிய நாட்களில் சிறப்பான நன்மை யை எதிர்பார்க்கலாம்.  ஜூலை 5க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். தொழில், வியாபாரத்தில் சீரான பலனை எதிர்பார்க்கலாம்.  எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.  கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். ராகுவால் சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். தீயோர் சேர்க்கை யால் சிரமம் குறுக்கிடலாம்.  ஜூன் 27,28,29, ஜூலை 2,3,4 ல் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். ஜூலை 12,13ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஜூலை 5க்கு பிறகு பெண்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு  உதவிகரமாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும்.

கலைஞர்களுக்கு தொழிலில் இருந்த இடர்ப்பாடு ஜூலை 5 க்கு பிறகு மறையும். அதன் பின் பெண்கலைஞர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  ஜூலை 9,10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பெயர் எடுப்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  ஜூன் 24 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகள் எள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். கால்நடை செல்வத்தால் வருமானம் பெருகும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும்.  ஜூலை 5 க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். ஜூலை 5,6,7 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருளுதவி கிடைக்கப் பெறலாம். சகோதரர் வழியில் பணம் கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,23,24,25,26,30, ஜூலை 1,5,6,12,13,14,15
* கவன நாள்: ஜூன் 18,19,20, ஜூலை16
* அதிர்ஷ்ட எண்: 5,6    நிறம்: வெள்ளை, பச்சை  

* பரிகாரம்:
● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு  அர்ச்சனை
● ராகு, கேதுவை வழிபட்டு உளுந்து தானம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar