பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
11:06
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம், கடந்த, 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, நடப்பாண்டிற்கான தீ மிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இரவு, மகாபாரத நாடகம், வரும், ஜூலை 1ம் தேதி நடைபெறும். இன்று, காலை, 11:00 மணிக்கு, உற்சவர் பாஞ்சாலி அம்மன் திருமணமும், 27ம் தேதி அர்ஜூனன் தபசும், ஜூலை, 1ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீ மிதி விழாவும், 2ம் தேதி தருமர் பட்டாபிஷேகமும் நடைபெறும்.