திருப்புத்துார்: திருப்புத்துார் புதுத்தெரு செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. ஜூன் 23ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கொண்ட கலசங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியர்களால் கோயில் வலம் வந்தது. பின்னர் காலை10:00 மணிக்கு புனிதநீரால் விமானக் கலசத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாட்டினை திருப்பணிக்குழு மற்றும் புதுத்தெருவினர் செய்தனர்.