உடுமலை: உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில், மழை பொழிவு அதிகரிக்க மஹாவராகி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில், மழை பொழிவு அதிகரிக்கவும், விவசாயம் செழிக்கவும், சுற்றுச்சூழல் மேம்படவும், முத்தையா பிள்ளை லே –அவுட் பகுதியிலுள்ளச க்தி விநாயகர் கோவிலில், மஹா வராகி சிறப்பு பூஜை நடந்தது. பூஜையையொட்டி, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பங்கேற்றனர்.