பதிவு செய்த நாள்
28
ஜூன்
2018
11:06
கோவை : போத்தனுார் கடைவீதியில் எழுந்தருளியுள்ள முருகன் கோவிலில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில், பக்தர்கள் தங்களை இணைத்துக்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.போத்தனுாரில் முருகன் கோவில், 1977ல் கட்டப்பட்டது. இக்கோவில் வளாகத்தில், சிவலிங்கம், நந்திகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர் ஆகியோருக்கு, தனி சன்னதி அமைக்கப்பட உள்ளது. அதோடு கோவில் வளாகத்தில், 70க்கு 50 அடி அளவில், 3,500 சதுர அடி பரப்பளவில், பக்தர்கள் காத்திருக்கும் மண்டபம் கட்டுமான பணி துவங்கியுள்ளது. கடந்த மார்ச் 6ல் பூமி பூஜை நிறைவடைந்து பணிகள் நடந்து வருகின்றன.நான்காவது முறையாக கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் தயாராகி வருகிறது. இதில் பக்தர்கள் தங்களை இணைத்துக்கொள்ள கோவில் நிர்வாகம் வாய்ப்பு வழங்கியுள்ளது. கட்டட கட்டுமானப்பொருட்களின் தேவையை அறிந்து, அவற்றை கொள்முதல் செய்து சமர்ப்பிக்கலாம். அல்லது கோவிலில் நிதி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.