திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் யானை வாகனத்தில் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2018 12:06
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கலில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆனிபிரமோற்ஸவ விழா, 6ம் நாளில் சுவாமி யானை வாகனத்திலும், செங்கமலத்தாயார் தோளுக்கினியான் வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.