பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
வில்லிவலம்: வில்லிவலம் முச்சந்தியம்மன் கோவிலில் நேற்று, கோலாகல கும்பாபிஷேகம் நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் முச்சந்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 29ம் தேதி காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. காலை, 10:05 மணிக்கு முச்சந்தியம்மன் கோவில், ராஜகோபுரம் மற்றும் விமானத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. வில்லிவலம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 8:15 மணிக்கு, வரதராஜப்பெருமாள் கோவிலிலும், கும்பாபிஷேகம் நடந்தது.