பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலில், நேற்று காலை சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். இதேபோன்று, தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர், வேல்முருகன் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பல்வேறு கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.