பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
சென்னை: கற்பக விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. கோயம்பேடு அடுத்த குமரன் நகரில், ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன், கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. காமகலா காமேஸ்வரர், கல்யாண வேங்டேச பெருமாள், மகாலட்சமி, சுப்ரமணியர், துர்கை அம்மன், சரஸ்வதி தேவி, அய்யப்பன், சண்டிகேஸ்வரர், சக்ரத்தாழ்வார் ஆகிய சன்னதிகள் உள்ளன. சில மாதங்களாக, அனைத்து சன்னதிகளும் புனரமைக்கப்பட்டன. மேலும், ராமர், சூரிய, சந்திர பகவான் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை, காலை, 9:15 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பனந்தாள் சர்வேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் நடந்த இந்த கும்பாபிஷேகத்தில், திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர், முத்துக்குமார சுவாமி தம்பிரான் பங்கேற்றார்.