பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
12:07
மாமல்லபுரம்: மணமை, திருவகத்தீஸ்வரமுடையார் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. மாமல்லபுரம் அடுத்த, மணமை, லிங்கமேடு பகுதியில், மனோன்மணி உடனுறை திருவகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை, பக்தர்கள் புதுப்பித்து, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். இந்நிலையில், திருநீலகண்டேஸ்வரருக்கு, கோவில் வளாகத்தில், தற்போது தனி சன்னதி அமைத்து, நேற்று காலை, 9:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதேபோல், திருப்போரூர் ஒன்றியம், தையூர் அழகாம்பிகை சமேத அழகேஸ்வரர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது.