கீழக்கரை:திருப்புல்லாணி இந்திராநகர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூலை 1 அன்று முதல் யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை,கோ பூஜை, கடம்புறப்பாடு உள்ளிட்டவைகளுடன் நடந்தது. கோயில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு,கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும், நடந்தது.