சாயல்குடி:சாயல்குடி கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆனி மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்நடந்தது. கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு,மண்டல பூஜை காலை 9:00 மணிக்கு நடந்தது.மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.பெண்கள் நெய்தீபம் ஏற்றி, சக்தி ஸ்தோத்திரம், பாராயணம் உள்ளிட்டவைகளை செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழு செய்திருந்தனர்.