வால்பாறை, வால்பாறையில் உள்ள கோவில்களில், ஆடி முதல் நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி முதல் நாளான நேற்று சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. இதே போன்று, வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவில்களில் ஆடி மாத முதல் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.