சிங்கம்புணரி. சிங்கம்புணரியில் வேங்கைபட்டி சாலை வீரமுத்தியம்மன் கோயிலில் ஆடி முதல் நாளான நேற்று அன்னதான பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.