மானாமதுரை, மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 28 ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடியில் தொடர்ந்து 10 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம்,இந்தாண்டு நாளை காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா துவங்குகிறது. விழா நாட்களில் சுவாமி ஹனுமார்,கருடன்,சேஷ,குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ந் தேதியும்,தீர்த்தவாரி 28ந் தேதியும் நடைபெற உள்ளது. 30 ந் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபிமாதவன்(எ) முத்துச்சாமி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் ஏமாற்றம்: ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலிலும் வருடந்தோறும் ஆடி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறும். இந்தாண்டு கும்பாபிேஷக பணிகள் நடைபெறுவதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் இந்தாண்டு ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.