பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
வீரபாண்டி: யோக ஆஞ்சநேயர், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தமிழ் மாத முதல் ஞாயிறை முன்னிட்டு, சேலம், ரெட்டிப்பட்டி, யோக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபி?ஷகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். அதேபோல், காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறமுள்ள சென்றாய பெருமாள் கோவிலில், வீரபக்த ஆஞ்சநேயருக்கு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, வடை, வெற்றிலை மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.