சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில், மகா சண்டி ?ஹாம விழா, கடந்த, 20ல் தொடங்கியது. நேற்று மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. சண்டிதேவி முன், வேத மந்திரங்கள் ஓதி, பெண்கள், விளக்கேற்றி, சுபிட்சமாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.