ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நடந்து வருகிறது. கோவில் தலவிருட்சமான, வன்னிமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள, வன்னியம்மன், வன்னிநாதருக்கு, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், ஆராதனை நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து, ஏழாம் திருமுறை, சுந்தரர் தேவாரம் முற்றோதுதல், தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அருள் நெறி திருக்கூட்ட பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.