வெளிப்பட்டினம் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் களப்பலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2018 06:07
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. இதில் துரியோதனன் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வெளிப்பட்டினம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ திருவிழா ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பக்தர்களுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. ஜூலை 14ல் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அன்று மாலை பஞ்சபாண்டவர் திருக்கல்யாணம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜூலை 16 ல் அர்ச்சுனன் தபசு காட்சியும், ஜூலை 18,19 ல் பீமன் கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. ஜூலை 20 ல் திருவிளக்கு பூனையும், ஜூலை 22 ல் அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு துரியோதனன் களப்பலி நிகழச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெற்றனர்.ஜூலை 26 ல் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், மாலை பவுர்ணமி கஞ்சியும் வழங்கப்படுகிறது. ஜூலை 27 ல் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் புஷ்பத்தில் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.