பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
12:07
சேந்தமங்கலம்: குருபூர்ணிமாவை முன்னிட்டு, குருமார்களை போற்றி நினைவு கூறும் வகையில், சேந்தமங்கலம் தத்தாஸ்ரமத்தில், சென்னை மஹாமேரு மண்டலி சார்பில், குருபூர்ணிமா மஹோத்ஸவம், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று மாலை, 3:00 மணிக்கு, சேந்தமங்கலம் பச்சுடையான்பட்டி முருகன்கோவில் அடிவாரத்தில் உள்ள அருணாஸ்ரமத்திலும், நாளை சேந்தமங்கலம் தத்தாஸ்ரமத்திலும் வேதபாராயணம், விஷ்ணு, லலிதா சஹஸ்ராம நாம பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, மஹாமேரு மண்டலியினர் செய்துள்ளனர்.