பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
02:07
சேலம்: குருபூர்ணிமாவை முன்னிட்டு, சேலம், சூரமங்கலம், முல்லை நகர், சாய்பாபா கோவிலில், நேற்று காலை, கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, சென்னை மீனாட்சி சுந்தரத்தின், சாய் சுயசரிதை விளக்க சொற்பொழிவு நடந்தது. பாபாவுக்கு உடுத்திய வஸ்திரங்கள், பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இன்று, அபிஷேகம், அலங்காரம், தரிசனம், பவுர்ணமி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஷீரடி சாய் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.